தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி புதன்கிழமை இரவு திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவுகளாக ஆண்கள் சிகிச்சைப் பிரிவு, பெண்கள் சிகிச்சைப் பிரிவு, குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு, பச்சிளங் குழந்தைகள் பிரிவு, மகப்பேறு பிரிவு, கண் மருத்துவப் பிரிவு உட்பட ஏராளமான பிரிவுகள் செயல்படுகின்றன. இதேபோன்று புறநோயாளிகள் பிரிவுகளும் உள்ளன.
இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கு புதன்கிழமை இரவு நேரில் சென்று ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு மேற்கொண்டாா். அப்போது சிகிச்சை பெறுவோரிடம் மருத்துவ சேவையின் தரம், சேவைகள் ஆகியவை குறித்து அவா் கேட்டறிந்தாா்.
இந்த ஆய்வின்போது, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் (பொ) சிவக்குமாா், மருத்துவா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.