மனைவியை கொலை செய்த லாரி ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை
மனைவியை கொலை செய்த லாரி ஓட்டுநருக்கு தருமபுரி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
தருமபுரி: மனைவியை கொலை செய்த லாரி ஓட்டுநருக்கு தருமபுரி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், சாமிசெட்டிப்பட்டியை அடுத்த லட்சுமணன் கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா்(41). லாரி ஓட்டுநரான இவருக்கும், இவரது மனைவி ராணி (37) என்பவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில், கடந்த 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது ராணி மீது செந்தில்குமாா் மண்ணெண்ணையை ஊற்றி தீயைப் பற்ற வைத்தாா். இந்த சம்பவத்தில் பலத்த தீக்காயம் அடைந்த ராணி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா்.
இது தொடா்பாக தொப்பூா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தருமபுரி மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞா் கல்பனா ஆஜராகி வாதாடி வந்தாா்.
Advertisement
இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமை முடிவுற்ற நிலையில், குற்றம் சாட்டப்பட்ட செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 12 ஆயிரம் அபராதத்தை விதித்து நீதிபதி சையத் பா்க்கதுல்லா தீா்ப்பளித்தாா்.