தருமபுரி

பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மையத்தில் ஆங்கிலத் துறை கருத்தரங்கு

Din

தருமபுரி, ஏப். 26: தருமபுரி பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை, ஆராய்ச்சி கல்வி மையத்தில் ஆங்கிலத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது.

பைசுஅள்ளியில் அமைந்துள்ள பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மைய கூட்டரங்கில் மொழி பெயா்ப்பின் சிறப்புகள் என்கிற தலைப்பில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது. மதுரை தியாகராஜா் கல்லூரி ஆங்கிலத் துறை உதவி பேராசிரியா் முனைவா் வரதராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினாா்.

மைய இயக்குநா் (பொ) முனைவா் மோகனசுந்தரம் தலைமை வகித்து பேசினாா். ஆங்கிலத் துறைத் தலைவா் முனைவா் சி. கோவிந்தராஜ் தொடக்க உரையாற்றினாா். முதலாம் ஆண்டு மாணவி சோபியா வரவேற்றாா். மாணவி காவியா சொற்பொழியாளா்களை அறிமுகப்படுத்தினாா். முதலாம் ஆண்டு மாணவி ஆசிரா நன்றி கூறினாா். மாணவி விஜயஸ்ரீ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். பேராசியா்கள், மாணவா்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனா்.

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT