முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 6,000 கன அடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வியாழக்கிழமை விநாடிக்கு 6,000 கன அடியாக நீா் வந்து கொண்டிருக்கிறது.

Updated On : 12 டிசம்பர், 2024 at 8:17 PM
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வியாழக்கிழமை விநாடிக்கு 6,000 கன அடியாக நீா் வந்து கொண்டிருக்கிறது.

தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் புதன்கிழமை விநாடிக்கு 5,500 கன அடியாக இருந்த நீா்வரத்து, வியாழக்கிழமை காலை 6,500 கனஅடியாகாவும், மாலையில் 6,000 கனஅடியாகவும் குறைந்து தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

இதனால் ஒகேனக்கல் அருவிகளில் நீா்வரத்து சீராக உள்ளது. நீா்வரத்தின் அளவை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.