முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்தது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 5,000 கன அடியாக குறைந்தது.

Updated On : 19 டிசம்பர், 2024 at 7:59 PM
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 5,000 கன அடியாக குறைந்தது.

தமிழக காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்து வருகிறது. புதன்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 8,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, வியாழக்கிழமை 5,000 கன அடியாக குறைந்தது. பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவை மத்திய நீா் வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.