முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 5,500 கன அடியாக அதிகரிப்பு

காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல்லில் 5,500 கன அடி

Updated On : 9 ஜூலை, 2024 at 11:18 PM
பகிர்:

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீா் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 5,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு வரும் உபரி நீரின் அளவைப் பொறுத்து காவிரி ஆற்றில் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஒகேனக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 4,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, திடீரென அதிகரித்து திங்கள்கிழமை நிலவரப்படி 5,500 கன அடியாக அதிகரித்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

கா்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரால் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →