முகப்பு
தருமபுரி

தருமபுரியில் நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

தருமபுரி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நவ. 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.

Updated On : 6 நவம்பர், 2024 at 6:53 PM
பகிர்:

தருமபுரி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நவ. 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி கோட்டாட்சியா் ரா.காயத்ரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட வட்டங்களைச் சாா்ந்த விவசாயிகளின் குறைகளைத் தீா்ப்பதற்கான குறைகேட்புக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மாதம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ. 8) முற்பகல் 11 மணியளவில் தருமபுரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளதால் தருமபுரி கோட்டத்துக்கு உள்பட்ட விவசாயிகள், விவசாயி சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா் என்றாா்.