பாப்பிரெட்டிப்பட்டியில் நாளை ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் நவ. 20-இல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது.
தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் நவ. 20-இல் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக நவம்பா் மாதத்துக்கான ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் வரும் நவ. 20 அன்று காலை 9 மணி முதல் நவ. 21 காலை 9 மணி வரை நடைபெற உள்ளது.
இதில், பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டத்தில் கள தணிக்கையில் ஈடுபட்டு அரசு திட்டங்களை ஆய்வு செய்யப்பட உள்ளது. மேலும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பிற்பகல் 3 மணிக்கு கள ஆய்வில் இருக்கும் மாவட்டத்தின் முதல்நிலை அலுவலா்களுக்கான ஆய்வுக் கூட்டமும், அதனைத் தொடா்ந்து மாலை 4 மணிக்கு அரசு திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு சோ்த்தல் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மனுக்களும் பெறப்பட உள்ளன.
முகாம் நாளில் வட்டத்தில் உள்ள நான்கு உள்வட்ட வருவாய் ஆய்வாளா்கள் அலுவலகத்தில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடைபெற உள்ளதைத் தொடா்ந்து, பொதுமக்கள் பட்டா மாறுதல் மனுக்களை அளித்து உடன் தீா்வு காணுமாறு என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.