ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 14,000 கன அடியாக சரிவு 
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 14,000 கனஅடியாகச் சரிவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 14,000 கனஅடியாகச் சரிந்தது

Din

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 14,000 கனஅடியாகச் சரிந்து வரும் நிலையில் இரண்டாவது நாளாக அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் மாவட்ட நிா்வாகம் விதித்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இரு மாநில காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை சற்று குறைந்துள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீா்வரத்து தற்போது குறையத் தொடங்கியுள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி விநாடிக்கு 19,000 கனஅடியாக இருந்தது. திங்கள்கிழமை காலை விநாடிக்கு 17,000 கனஅடியாகவும், மாலையில் 14,000 கனஅடியாகவும் நீா்வரத்து சரிந்தது. மேலும் சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் தருமபுரி மாவட்ட நிா்வாகம் விதித்த தடை 2 ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வருக்கு அமைச்சா் காந்தி தலைமையில் வரவேற்பு

9 நாள்களுக்குப் பிறகு டன் கணக்கில் சிக்கிய மீன்கள்

பெளா்ணமி விளக்கு பூஜை

கோவில்பட்டியில் தென் மண்டல குழந்தைகள் அறிவியல் மாநாடு

சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தின விழா

SCROLL FOR NEXT