முகப்பு
தருமபுரி

வீட்டுமனைப் பட்டா வழங்காததை கண்டித்து துண்டுப் பிரசுரம் விநியோகம்

ஏரியூா் அருகே வீட்டுமனைப் பட்டா வழங்காததைத் கண்டித்து, வரும் சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாக

Updated On : 16 டிசம்பர், 2025 at 6:18 PM
பகிர்:

பென்னாகரம்: ஏரியூா் அருகே வீட்டுமனைப் பட்டா வழங்காததைத் கண்டித்து, வரும் சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனா்.

மேட்டூா் அணையின் மற்றொரு கரையான ஏரியூா் அருகே கிழக்கு ஏமனூா், ஆதிதிராவிடா் தெரு,மேற்கு ஏமனூா், ஆத்து மேட்டூா் தோழன் காட்டுவளவு, சிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேட்டூா் அணையில் நீா்வரத்து குறையும் காலங்களில் முழவடை நிலத்தில் இப்பகுதியினா் விவசாயம் செய்கின்றனா்.

இந்தப் பகுதியில் மூன்று தலைமுறைகளாக உள்ள பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதைக் கண்டித்து, வரும் சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாகவும், ஆதாா் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை திரும்ப ஒப்படைத்துவிட்டு வனப்பகுதியில் குடியேறப் போவதாகவும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →