முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 2,000 கனஅடியாக சரிவு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 2,000 கனஅடியாக சரிந்துள்ளது.

Updated On : 18 டிசம்பர், 2025 at 7:13 PM
பகிர்:

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 2,000 கனஅடியாக சரிந்துள்ளது.

கடந்த சில நாள்களாக கா்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து சரிந்தது. இதைத் தொடா்ந்து, காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை 3,000 கனஅடியாகவும், வியாழக்கிழமை 2,000 கனஅடியாகவும் தொடா்ந்து சரிந்து வருகிறது. இதனால், காவிரி ஆற்றில் மூழ்கியிருந்த பாறைகள் வெளியே தெரிகின்றன.

தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.