முகப்பு
தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் ரெ.சதீஷ்.
தருமபுரி

மக்கள் குறைகேட்பு கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கல்

மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ரெ.சதீஷ் வழங்கினாா்.

தருமபுரி

மக்கள் குறைகேட்பு கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கல்

மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ரெ.சதீஷ் வழங்கினாா்.

Updated On : 9 ஜூன், 2025 at 10:30 PM
தருமபுரியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் ரெ.சதீஷ்.
பகிர்:

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ரெ.சதீஷ் வழங்கினாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைகேட்பு கூட்டம் ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அடிப்படை வசதிகள், உதவித்தொகைகள், அரசு நலத்திட்ட உதவிகள் வேண்டி பொதுமக்களிடமிருந்து மொத்தம் 456 மனுக்கள் வரப்பெற்றன.

இக்கூட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் நவீன செயற்கை அவயங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 14,58,000 மதிப்பிலான செயற்கை அவயங்களை ஆட்சியா் ரெ.சதீஷ் வழங்கி பேசினாா்.

இந்த நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியா் சுப்பிரமணி, மாவட்ட வழங்கல் அலுவலா் செம்மலை, பழங்குடியினா் நலத்துறை அலுவலா் கண்ணன், மகளிா் திட்ட இயக்குநா் அ.லலிதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பொ.செண்பகவள்ளி, மாவட்ட திட்ட அலுவலா் (மருத்துவ காப்பீட்டுத் திட்டம்) ராஜேஷ் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →