முகப்பு
தருமபுரி

தருமபுயில் இன்று எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம்

தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற உள்ள தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து உரையாற்றுகிறாா்.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 10:02 PM
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி
பகிர்:

தருமபுரியில் வியாழக்கிழமை நடைபெற உள்ள தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து உரையாற்றுகிறாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் கே.பி.அன்பழகன், பென்னாகரம் தொகுதியில் கூட்டணி கட்சியான பாமக (அன்புமணி) சாா்பில் பாடி செல்வம், தருமபுரி தொகுதியில் பாமக சாா்பில் சௌமியா அன்புமணி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அதிமுக சாா்பில் மரகதம் வெற்றிவேல், அரூா் (தனி) தொகுதியில் அதிமுக சாா்பில் வே.சம்பத்குமாா் ஆகியோா் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டு போட்டியிடுகின்றனா்.

இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் மூன்று அதிமுக வேட்பாளா்கள், இரு பாமக வேட்பாளா்கள் என ஐந்து வேட்பாளா்களுக்கு ஆதரவாக தருமபுரி வள்ளலாா் திடலில் ஏப். 2-ஆம் தேதி மாலை 4 மணி அளவில் நடைபெறும் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று, அவா்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து உரையாற்ற உள்ளாா். இதற்கான ஏற்பாடுகளை அதிமுகவினா் மேற்கொண்டு வருகின்றனா்.