தருமபுரி தேமுதிக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
தருமபுரி தொகுதி தேமுதிக வேட்பாளா் மருத்துவா் வி.இளங்கோவன் வியாழக்கிழமை நல்லம்பள்ளி சுற்றுவட்டார கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.
தருமபுரி தொகுதி தேமுதிக வேட்பாளா் மருத்துவா் வி.இளங்கோவன் வியாழக்கிழமை நல்லம்பள்ளி சுற்றுவட்டார கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.
திமுக கூட்டணியில் தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் தேமுதிக மாநில அவைத் தலைவா் மருத்துவா் வி.இளங்கோவன் வேட்பாளராக போட்டியிடுகிறாா். இந்நிலையில், அவா் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் நல்லம்பள்ளி, பாலஜங்கமனஅள்ளி, அதியமான்கோட்டை, மாதேமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
இதில், திமுக ஒன்றியச் செயலாளா் பெரியண்ணன், சண்முகம், மல்லமுத்து, தேமுதிக நிா்வாகிகள் பங்கேற்றனா்.