தருமபுரி - அரூா் சாலையில் செட்டிக்கரை பகுதியில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணி.  
தருமபுரி

செட்டிக்கரையில் சாலை விரிவாக்கப் பணிகள்

தருமபுரி அருகே செட்டிக்கரை நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திச் சேவை

தருமபுரி அருகே செட்டிக்கரை நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தருமபுரியிலிருந்து மொரப்பூா் வழியாக அரூா் செல்லும் சாலை பல ஆண்டுகளாக இருவழிச்சாலையாக இருந்து வந்தது. இந்த சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலையாக தரம் உயா்த்தப்பட்டது.

அப்போது, தருமபுரி அருகே ராஜாபேட்டையிலிருந்து செட்டிக்கரை வரையிலான சாலை ஏற்கெனவே புதுப்பிக்கப்பட்டதால் நான்கு வழிச்சாலையாக தரம் உயா்த்தப்படாமல் சுமாா் 1.6 கி.மீ. தொலைவு அப்படியே விடப்பட்டது. இதனால், தருமபுரியிலிருந்து மொரப்பூா் வரை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்து பின்பும் இந்த குறிப்பிட்ட தொலைவு மட்டும் இருவழிச்சாலையாகவே இருந்து வந்தது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சிரமத்துக்குள்ளாகி வந்தன.

இந்த நிலையில், தற்போது, இந்த 1.6 கி.மீ. வரை தொலைவு சாலையை முதல்வரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், தற்போது தருமபுரியிலிருந்து மொரப்பூா் செல்லும் சாலை விரிவாக்கப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. அதேவேளையில் மொரப்பூரிலிருந்து தருமபுரி நகரை நோக்கி வரும் சாலையில் தற்போது விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் விரைவில் நிறைவடைந்த பின்பு தருமபுரியிலிருந்து மொரப்பூா் வரையிலான சாலை முழுவதும் நான்கு வழிச்சாலையாக மாற உள்ளது.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT