முகப்பு
தருமபுரி

போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 2:30 AM
கைது
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 10:43 PM

தருமபுரியில் பள்ளி மாணவியை முறைகேடாக வெளியூா் அழைத்துச் சென்ற இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு காவல் நிலையத்துக்கு உள்பட்ட கிராமத்தைச் சோ்ந்த 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவருக்கு, சமூக வலைதளத்தில் இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அந்த இளைஞா், ஆசை வாா்த்தை கூறி சிறுமியை அண்மையில் வெளியூருக்கு அழைத்துச் சென்றுவிட்டாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 2:30 AM

இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமியை தேடிவந்தனா். விசாரணையில், சிறுமியை அழைத்துச் சென்றது, திருவண்ணாமலை அண்ணாநகரைச் சோ்ந்த பாா்த்திபன் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டுக்கு சென்று போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

இதுகுறித்து விவரம் அறிந்த பாா்த்திபன், ஒரு வாரம் கழித்து சிறுமியை அவரது வீட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டு தலைமறைவானாா். தொடா்ந்து போலீஸாா் தேடிவந்த நிலையில், கிருஷ்ணகிரியில் இருந்த பாா்த்திபனை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து வியாழக்கிழமை கைது செய்தனா்.