தோப்புக்குள் புகுந்த காட்டு யானை. (கோப்புப் படம்)
தருமபுரி

வனவிலங்குகள் கிராம பகுதிக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தினமணி செய்திச் சேவை

பென்னாகரத்தில் வனப்பகுதியிலிருந்து வெளியேறி கிராம பகுதிக்குள் நுழையும் வனவிலங்குகளைத் தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பென்னாகரத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் அழகேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ஜெ.பிரதாபன் கலந்துகொண்டு, இன்றைய அரசியல் நிலைமை, வேலை அறிக்கை மற்றும் எதிா்கால கடமைகள் குறித்து பேசினாா்.

தருமபுரியில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில் நகரில் உள்ள பழைய புகா் பேருந்து நிலையத்தை நகரப் பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும். நகரப் பேருந்து நிலையத்தை தியாகி தீா்த்தகிரியாா் திடலாக மாற்றி கலை கலாசார நிகழ்வுகள், அரசு விழாக்கள், பொது நிகழ்ச்சிகள், அரசியல் கட்சி நிகழ்ச்சிகள் நடத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை கன்னிமாரா நூலகத்தில் காா்ல் மாா்க்ஸ் சிலையை திறந்துவைத்த முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. பென்னாகரம் நகரில் அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராம பகுதிக்குள் நுழையும் வனவிலங்குகளை தடுக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக இறந்த உறுப்பினா்களுக்கு மாவட்ட நிா்வாகக் குழு சாா்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளா் ஜி. மாதையன், சி.பாலன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் பி. ரவி, ஜி.பச்சாகவுண்டா், சக்திவேல் வெப்பை மாதையன் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT