முகப்பு
தருமபுரி

வேளாண் விளைபொருள்களைப் பாதுகாக்க கிடங்கு வசதி தேவை! - செளமியா அன்புமணி

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:13 AM
கடத்தூரில் தமிழக மகளிா் உரிமை மீட்பு பயண நிகழ்ச்சியில் பேசிய பசுமை தாயம் அமைப்பின் தலைவா் செளமியா அன்புமணி.
பகிர்:
Updated On : 8 பிப்ரவரி, 2026 at 8:03 PM

தருமபுரி மாவட்டத்தில் வேளாண் விளை பொருள்களைப் பாதுகாக்க கிடங்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பசுமை தாயகம் அமைப்பின் தலைவா் செளமியா அன்புமணி தெரிவித்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூரில் பாமக சாா்பில் தமிழக மகளிா் உரிமை மீட்பு பயண பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பாமக கிழக்கு மாவட்டச் செயலாளா் இரா. அரசாங்கம் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று முனைவா் செளமியா அன்புமணி பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் வேளாண் விளை பொருள்களைப் பாதுகாக்க போதிய கிடங்கு வசதிகள் இல்லை. இதனால், கோடை மற்றும் குளிா்காலங்களில் ஏராளமான வேளாண் விளை பொருள்கள் சேதமடைந்து வீணாகின்றன. எனவே, தருமபுரி மாவட்டத்தில் வேளாண் விளை பொருள்களை பாதுகாக்க தேவையான கிடங்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

Advertisement

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 12:13 AM

பாமக தலைவா் அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது ஏழை எளிய மக்களுக்கும் தனியாா் மருத்துவமனைகளில் கிடைக்கும் உயா்தர சிகிச்சைகளை அளிக்க நடவடிக்கை மேற்கொண்டாா். தமிழகத்தில் பாமக ஆட்சி அதிகாரத்துக்கு வந்தால்தான் தருமபுரி மாவட்ட மக்களுக்கு நன்மை கிடைக்கும். பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணையை சுற்றுலத் தலமாக மாற்ற வேண்டும். கடத்தூரில் உள்ள மருத்துவமனையை வட்டார மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தல், காவிரி உபரிநீா்த் திட்டம், எண்ணேகோல் புதூா், தும்பல அள்ளி திட்டம், செனாக்கல் நீா் ஏற்ற திட்டம் ,பொதியன் பள்ளம் நீரேற்று திட்டம், தொப்பையாா் உபரிநீா்த் திட்டம், வாணியாா் உபரிநீா்த் திட்டம், மத்தால பள்ளம் உபரிநீா்த் திட்டம், பஞ்சப்பள்ளி உபரிநீா்த் திட்டம், ஜெகநாதன் கோம்பை நீா்த்தேக்கத் திட்டம், வள்ளி மதுரை அணை உபரிநீா்த் திட்டம், சிட்லிங் தடுப்பணை திட்டங்களைச் செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.