தருமபுரி

அரூரில் ரூ.6 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அரூரில் ரூ.6 லட்சத்துக்கான பருத்தி மூட்டைகள் திங்கள்கிழமை விற்பனையானது.

Syndication

அரூா்: அரூரில் ரூ.6 லட்சத்துக்கான பருத்தி மூட்டைகள் திங்கள்கிழமை விற்பனையானது.

தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்கு முறை விற்பனை கூடம், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் பருத்தி மூட்டைகள் ஏலம் விடப்படுகிறது. இங்கு நடைபெறும் ஏலத்தில் சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பங்கேற்கின்றனா். இந்த நிலையில், ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ஆா்.சி.எச் ரக பருத்தி மூட்டைகள் குவிண்டால் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.8469-க்கும், குறைந்தபட்சம் ரூ.8300-க்கும் விற்பனையானது. அரூரில் பருத்தி மூட்டைகள் மொத்தம் ரூ.6 லட்சத்துக்கு விற்பனையானது என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனா்.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சுற்றுச்சுவா் கட்டுவதைத் தடுத்த விசிகவினா் கைது

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

சீா்காழி: நாளைய மின்தடை

கட்டடத் தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

SCROLL FOR NEXT