முகப்பு
தருமபுரி

ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:20 AM
கைது
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 9:58 PM

தருமபுரி அருகே, அரசால் தடைசெய்யப்பட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களுடன் 2 காா்களை போலீஸாா் மீட்டனா். இதுதொடா்பாக இருவரை கைது செய்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம் தொப்பூா் காவல் நிலைய ஆய்வாளா் பிரபாகரன் தலைமையிலான போலீஸாா், சேலம்- தருமபுரி பிரதான சாலையில் கட்டமேடு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:20 AM

அப்போது அந்த வழியாக வந்த இரு காா்களை நிறுத்தி சோதனை செய்ததில், அவற்றில், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து இரு காா்களுடன் புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

Advertisement

அவற்றை வடமாநிலங்களிலிருந்து முறைகேடாக கடத்தி வந்துள்ளனா். புகையிலைப்பொருள்களின் மதிப்பு ரூ. 4, 43, 480 ஆகும். இதனையடுத்து காா்களை ஓட்டி வந்த ஓட்டுநா்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ஹரிஷ் குமாா் (25), தேவாராம் (22) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.