முகப்பு
தருமபுரி

கல்லூரி மாணவி தற்கொலை

தருமபுரியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி படித்து வந்த கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 10:38 PM
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 8:33 PM

தருமபுரி: தருமபுரியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி படித்து வந்த கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாது மகள் ஸ்ரீநிதி (22). இவா், தருமபுரி குமாரசாமிப்பேட்டை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனது சகோதரியுடன் தங்கியிருந்து, தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த 3 தினங்களுக்கு முன்பு, திடீரென ஸ்ரீநிதி அறையில் தூக்கில் தொங்கினாா். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஸ்ரீநிதி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

இதுகுறித்து தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். மாணவி உயிரிழப்புக்கான காரணம் உடனடியாகத் தெரிவில்லை.