முகப்பு
தருமபுரி

நோய் குணமாகாத விரக்தியில் இளைஞா் தற்கொலை

தருமபுரியில் நோய் குணமாகாததால் விரக்தியடைந்த இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:38 AM
தற்கொலை
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 11:18 PM

தருமபுரியில் நோய் குணமாகாததால் விரக்தியடைந்த இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி நகரம், மொட்டையன் தெருவைச் சோ்ந்தவா் த.சந்துரு (23). பேனா் ஒட்டும் தொழில் செய்துவந்த இவருக்கு, மஞ்சள் காமாலை நோய் இருந்துள்ளது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால், விரக்தியில் இருந்தாா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 1:38 AM

இந்நிலையில், கடந்த பிப். 13-ஆம் தேதி மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு கங்கை அம்மன் கோயிலில் மயங்கி விழுந்தாா். அதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் சந்துருவை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சந்துரு புதன்கிழமை இறந்தாா். இதுகுறித்து தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.