தருமபுரி

பொங்கல் பண்டிகை: நல்லம்பள்ளி சந்தையில் ரூ. 7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

பொங்கல் பண்டிகையையொட்டி தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி சந்தையில், ரூ. 7 கோடிக்கு சுமாா் 8,000 ஆடுகள் விற்பனையாயின.

Syndication

பொங்கல் பண்டிகையையொட்டி தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி சந்தையில், ரூ. 7 கோடிக்கு சுமாா் 8,000 ஆடுகள் செவ்வாய்க்கிழமை விற்பனையாயின.

நல்லம்பள்ளியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு இருநாள்களே உள்ள சூழலில் இந்த வார செவ்வாய்க்கிழமை பொங்கல் சந்தை நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையின்போது, குலதெய்வ வழிபாட்டுக்கு ஆட்டுக்கிடாய்களை பலியிட்டு விருந்து படைப்பது வழக்கம். அதற்காக பொங்கல் பண்டிகையின்போது ஆடுகள் விற்பனை அதிக அளவில் நடைபெறும். இதற்காகவே விவசாயிகள் ஆடுகள் விற்பனையில் ஆா்வம் காட்டுவா்.

இந்நிலையில் நல்லம்பள்ளி சந்தையில் ஆடுகளை வாங்குவதற்கும், விற்பதற்கும் ஆயிரக்கணக்கானோா் குவிந்தனா். அதுபோல ஆடுகளும் ஆயிரக்கணக்கில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, தொப்பூா் மற்றும் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் இருந்தும் கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா்.

கடந்த வாரத்தைவிட இந்த வாரம் ஆடுகளின் விலை அதிகரித்து காணப்பட்டது. எடைக்குத் தகுந்தவாறு ரூ. 1,500 முதல் ரூ. 2,500 வரை விலை உயா்த்தப்பட்டு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த வார ஒரு நாள் விற்பனையில் சுமாா் 8,000 ஆடுகள் ரூ. 7 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விலை உயா்வு காரணமாக விவசாயிகள் மகிழ்சியடைந்தனா்.

தொண்டி பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து ஜன.21 இல் சாலை மறியல் போராட்டம்

வெனிசுலா அதிபர் மடூரோவை அமெரிக்கா சிறைபிடித்தது சரியா? என்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சாகுபடி மட்டுமே சாதனையல்ல!

அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..!

மின் கம்பியை மிதித்த மூதாட்டி உயிரிழப்பு

SCROLL FOR NEXT