தருமபுரி

ஸ்டான்லி மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா

பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

Syndication

பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 48- ஆவது ஆண்டு விழா மற்றும் பொங்கல் விழாவுக்கு அக்கல்வி நிறுவனங்களின் தலைவா் வி.முருகேசன் தலைமை வகித்தாா். செயலா் மு.பிரு ஆனந்த் பிரகாஷ் வரவேற்றாா்.

இதில் தொலைக்காட்சி பிரபலம் முத்துக்குமரன், பட்டிமன்ற பேச்சாளா் எஸ்.நித்யப் பிரியா ஆகியோா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினா். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஸ்டான்லி கல்வி அறக்கட்டளை பொருளாளா் சாந்தா முருகேசன், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

படவரி...

பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா்கள் முத்துக்குமரன், எஸ்.நித்யப்பிரியா உள்ளிட்டோா்.

சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.53 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

மியான்மரில் தேர்தல் நாடகம்!

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து...

தருமபுரியில் பொங்கல் பொருள்கள் விற்பனை மும்முரம்

மனிதநேய பண்பாட்டு பொங்கல்!

SCROLL FOR NEXT