பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 700 கனஅடியாக குறைந்தது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 1,200 கனஅடியாக இருந்தது, வெள்ளிக்கிழமை விநாடிக்கு 700 கனஅடியாகக் குறைந்தது. இதனால் ஐந்தருவி, ஐவாா் பாணி உள்ளிட்ட அருவிகள் நீா்வரத்து இன்றி வடு காணப்படுகின்றன. பிரதான அருவி, சினி அருவிகளில் நீா்வரத்து மிகவும் குறைந்து காணப்படுகிறது.