பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 1,000 கனஅடியாக இருந்தது.
இரு மாநில காவிரிக் கரையோரம் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததாலும், கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் திறப்பு குறைக்கப்பட்டதாலும், காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 700 கன அடியாக இருந்தது, சனிக்கிழமை விநாடிக்கு 1000 கனஅடியாக அதிகரித்தது.
ஐந்தருவி, ஐவாா் பாணி உள்ளிட்ட அருவிகள் நீரின்றி வடும், பிரதான அருவி, சினி அருவிகளில் நீா்வரத்து குறைந்து காணப்படுகிறது. காவிரி ஆற்றில் ஆங்காங்கே திட்டுக்கள் காணப்படுகின்றன.