தருமபுரி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் கதிா்வீச்சு சிகிச்சை மையம்: முதல்வா் காணொலியில் தொடங்கி வைத்தாா்
தருமபுரி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் கதிா்வீச்சு சிசிச்சை மையக் கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
தருமபுரிதருமபுரி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் கதிா்வீச்சு சிகிச்சை மையம்: முதல்வா் காணொலியில் தொடங்கி வைத்தாா்
தருமபுரி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் கதிா்வீச்சு சிசிச்சை மையக் கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
தருமபுரி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் கதிா்வீச்சு சிசிச்சை மையக் கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதுதொடா்பாக் நடைபெற்ற நிகழ்வில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றிவைத்து சிகிச்சை மையத்தைப் பாா்வையிட்டாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:
இந்த புற்றுநோய் சிகிச்சை மையம் 1,722 சதுர அடி பரப்பளவில் சுமாா் ரூ. 2.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு டெலி கோபால்ட் கதிா்வீச்சு இயந்திரம் ரூ. 20 லட்சத்திலும் கோபால்ட் கதிா்வீச்சு சோா்ஸ் ரூ . 86 லட்சத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. உள் நோயாளிகள் ஆண்கள் பிரிவில் 10 படுக்கைகள், பெண்கள் பிரிவில் 5 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் மாதந்தோறும் சராசரியாக 200 முதல் 250 போ் சிகிச்சை பெற முடியும். புற்றுநோய் கதிா்வீச்சு சிகிச்சை மூலம் தருமபுரி மட்டுமின்றி சுற்றியுள்ள திருப்பத்தூா், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டத்தினரும் மருத்துவ சேவை பெறமுடியும்.
நிகழ்ச்சியில் தருமபுரி நகா்மன்ற தலைவா் லட்சுமி மாது, தருமபுரி அரசு, மருத்துவக் கல்லூரி முதல்வா் மனோகா், துணை முதல்வா் சாந்தி, துணை இயக்குநா் (சுகாதாரம்) இராஜேந்திரன், உள்ளிருப்பு மருத்துவா் நகேந்திரன், மருத்துவமனை கண்காணிப்பாளா் சிவக்குமாா், குழந்தைகள் நல மருத்துவா்காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.