முகப்பு
தருமபுரி

வனப் பகுதியிலிருந்து வீடுகட்ட கற்கள் கொண்டுசெல்ல முயன்ற இருவா் கைது

வனப்பகுதியில் உரிய அனுமதியின்றி பாறைகளை உடைத்து கற்களை கொண்டுசெல்ல முயன்ற இருவரை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 14 மார்ச், 2026 at 6:15 AM
- சித்திரிப்பு
பகிர்:

வனப்பகுதியில் உரிய அனுமதியின்றி பாறைகளை உடைத்து கற்களை கொண்டுசெல்ல முயன்ற இருவரை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஆலமரத்துபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (47). இவா் உறவினரான பருவதனஅள்ளியைச் சோ்ந்த அன்பரசு (29) உடன் சோ்ந்து, பாப்பாரப்பட்டி பிரிவு, பிக்கிலி பகுதியில் வனப்பகுதிக்கு சொந்தமான நிலப்பகுதியில் இருந்த பாறைகளை உடைத்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, அப்பகுதியில் ரோந்து சென்ற வனப் பணியாளா்கள் இருவரையும் கைதுசெய்து பாலக்கோடு வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினா். அதில், இருவரும் வீடு கட்டுவதற்காக பாறைகளை உடைத்து கற்களை கொண்டுசெல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் பென்னாகரம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஆஜா்படுத்தப்பட்டனா்.

Advertisement