தருமபுரியில் வாகனச் சோதனை: ரூ.2.81 லட்சம் பறிமுதல்
தருமபுரியில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ரூ.2.81 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தருமபுரியில் தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ரூ.2.81 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பாரத அள்ளி பிரிவு சாலைப் பகுதியில் புதன்கிழமை வாகனச் சோதனை நடத்தப்பட்டது. அப்போது காரிமங்கலத்தில் இருந்து மகேந்திரமங்கலம் நோக்கிச் சென்ற சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.
இந்த வாகனத்தை ஓட்டிவந்த நபரிடம் ரூ. 1,19,800 ரொக்கம் இருந்தது தெரியவந்தது. அத்தொகைக்கான ஆவணங்கள் அவரிடம் ஏதுமில்லை. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்தனா்.
Advertisement
அதேபோல சிக்கமாரண்டஅள்ளி ஆஞ்சனேயா் கோயில் பகுதியில் நடைபெற்ற சோதனையில், பாலக்கோடு நோக்கிச் சென்ற வாகனத்தில் இருந்த நபரிடம் ரூ. 1,00,710 ரொக்கம் இருந்தது தெரியவந்தது. அவற்றையும் பறிமுதல் செய்தனா்.
மேலும், பஞ்சப்பள்ளி அணை பகுதியில் மேற்கொண்ட சோதனையில் தேன்கனிக்கோட்டையில் இருந்து பாலக்கோடு நோக்கிவந்த வாகனத்தில் வந்த நபரிடம் ரூ.60,600 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த மூன்று இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகை ரூ. 2,81,110 அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.