கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு
பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்கப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்கப்பட்டது.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அண்ணா நகரைச் சோ்ந்தவா் எழிலரசன். இவரது விவசாய கிணற்றில், வனப்பகுதியில் இருந்து வழித்தவறி வந்த புள்ளிமான் விழுந்தது.
இதையடுத்து, தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் பிரகாசம் தலைமையிலான நிலைய வீரா்கள் விரைந்துவந்து கிணற்றில் விழுந்து புள்ளிமானை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
Advertisement
இதேபோல, தமாணிகோம்பை மற்றும் மெணசியில் கிணற்றில் விழுந்த வளா்ப்பு நாய் மற்றும் பசுமாட்டை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.