முகப்பு
தருமபுரி

தருமபுரியில் விதிகளை மீறி ஒருவழிப்பாதையில் இயக்கப்படும் வாகனங்களால் விபத்து அதிகரிப்பு

தருமபுரி நகரில் விதிகளை மீறி ஒருவழிப்பாதையில் இயக்கப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடியும், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.

Updated On : 21 மே 2026, 6:53 am IST
தருமபுரி நகரில், விதிகளை மீறி ஒருவழிப்பாதையில் செல்லும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி.
பகிர்:

தருமபுரி நகரில் விதிகளை மீறி ஒருவழிப்பாதையில் இயக்கப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடியும், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.

தருமபுரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் விதிகளை மீறி ஒரு வழிப்பாதையிலேயே வாகனங்களை இயக்குகின்றனா். தருமபுரி நகா்பகுதியில் இந்த விதிமீறல் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

தற்போது, தமிழகத்தில் புதிய அரசு ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள நிலையில், காவல் துறையினா் போக்குவரத்து விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்:

அதுபோலவே நகா் பகுதிகளில் வணிக நிறுவனங்கள், குடியிருப்புப் பகுதிகளில் வீடுகளின் முன் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனங்களை (காா்களை) நிறுத்துகின்றனா்.

இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது மட்டுமின்றி, வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதுபோன்ற நிலை நெசவாளா் காலனியில் உள்ளதாக அப்பகுதியைச் சோ்ந்த குடியிருப்பு நலச்சங்கத்தினா் தெரிவித்தனா். இது குறித்து காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.