முகப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில், கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:55 AM
பகிர்:

ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில், கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் த.பழனிசாமி தலைமை வகித்தார். முன்னாள் மாநிலத் தலைவர் சு.மாரியப்பன் ஆர்ப்பாட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசினார்.

இதில், ஆறாவது ஊதியக் குழுவில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளை தமிழக அரசு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வை உடனடியாக ரத்து செய்து, வேலைவாய்ப்பக முன்னுரிமைப்படி ஆசிரியர் நியமனங்களை அமல்படுத்த வேண்டும்.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்.

பகுதிநேர தொழில்கல்வி சிறப்பாசிரியர்களை முழு நேர ஆசிரியர்களாக நிலை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஓய்வு பெற்றோர் பிரிவின் மாவட்டத் தலைவர் வி.ரங்கப்பன், ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஏ.ஜெய ஆரோக்கியசாமி, மாவட்டப் பொருளாளர் இ.என்.மணி, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.அமலோற்பவ மேரி, மாநில செயற்குழு உறுப்பினர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டணியின் மாவட்டச் செயலர் செ.வெங்கடேசன் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் கே.தீர்த்தகிரி நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →