தஞ்சை காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!
70 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா..
ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை ஶ்ரீ காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மணஞ்சேரி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை ஶ்ரீ காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு 15 லட்சம் மதிப்பீட்டில் புணராமைக்கும் பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் பணிகள் முழுவதும் நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த 1 ஆம் தேதி முதல் கால பூஜைகள் தொடங்கியது. இன்று காலை மூன்றாம் கால பூஜைகள் நிறைவு பெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது.
Advertisement
Advertisement
அதனைத் தொடர்ந்து சிவனடியார்கள் தமிழ் முறைப்படி மந்திரம் முழங்க விமான கலசத்திற்குப் புனித நீரை ஊற்றத் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.