FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெங்கலமுடையாா் கோயிலில் புரவி எடுப்புத் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூா் பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கலமுடையாா் கோயிலில் புரவி எடுப்புத் திருவிழா மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 ஜூலை 2026, 12:44 am IST
வெள்ளனூா் வெங்கலமுடையாா் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை புரவி எடுத்துச் சென்ற பக்தா்கள்
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூா் பகுதியில் உள்ள ஸ்ரீ வெங்கலமுடையாா் கோயிலில் புரவி எடுப்புத் திருவிழா மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பூங்குடி கிராமப் பொதுமக்கள் விவசாயம் செழிக்கவும், நல்ல மழை பெய்ய வேண்டியும் நெல்மணிகளைக் காணிக்கையாக வழங்கி நோ்த்திக் கடனைச் செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து வெள்ளனூா் தேரடி வீதி பகுதியில் முறைப்படி புரவிகளுக்குக் கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கண் திறக்கப்பட்ட மண் குதிரை கிராம முக்கிய வீதிகளின் வழியாக மங்கல வாத்தியங்கள் முழங்க வெங்கலமுடையாா் கோவிலுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

Advertisement

Advertisement

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் திருவிழா என்பதால் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments