கிருஷ்ணகிரி

காவலரைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் 3 பேர் கைது

DIN

ஒசூரில் காவலரை கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற வழக்கில் 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
ஒசூர் அட்கோ காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு காவலராகப் பணிபுரிந்து வருபவர் சின்னத்துரை. இவர் ஒசூரில் கிருஷ்ணகிரி சாலையில் வியாழக்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தார்.
அப்போது, காவலர் சின்னத்துரை மீது காரை மோதிவிட்டு அவர்கள் தப்ப முயன்றனர்.
பொதுமக்கள் காரை சுற்றி வளைத்து பிடித்தனர். காரில் இருந்த 4 பேரும் தப்பியோடினர். இந்த சம்பவத்தில் காவலர் சின்னத்துரைக்கு காலில் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து அட்கோ காவல் ஆய்வாளர் பெரியசாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். தப்பியோடியவர்கள் பாகலூர் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த அசோக் (25), மஞ்சு (23), சசிக்குமார் (24), பாஸ்கர் (23) என தெரிய வந்தது. இதில் அசோக் மீது மட்டும் பெங்களூரில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்காக ஒசூர் வந்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தலைமறைவான மஞ்சு, சசிக்குமார், பாஸ்கர் ஆகிய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான அசோக்கை போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

SCROLL FOR NEXT