கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி குகை பெரிய மாரியம்மன் கோயில் வருஷாபிஷேக விழா

தினமணி

கிருஷ்ணகிரி ஓம் அருள்மிகு குகை பெரிய மாரியம்மன் கோயில் 7-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 கிருஷ்ணகிரி பழையபேட்டை, குப்பம் சாலையில் உள்ள அக்காளபுரத்தில் அமைந்துள்ள ஓம் அருள்மிகு குகை பெரிய மாரியம்மன் கோயில் வருஷாபிஷேக விழாவையொட்டி மங்கள வாத்தியம், விக்னேஸ்வர பூஜை, புன்யாஹவசனம், மகா கணபதி கலச பூஜை, நவக்கிரஹ பூஜை, அம்பாள் கலச பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், அம்பாள் மூல மந்திர ஹோமம், 108 திரவிய ஹோமம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
 அத்துடன் கலச புறப்பாடு, அம்பாள் கலச அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் பொங்கல் வைத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT