கிருஷ்ணகிரி

பர்கூர் கூட்டுறவு ஐடிஐ-இல் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

தினமணி

பர்கூர் கூட்டுறவு ஐடிஐ-இல் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் ஆக.22-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சுப்பிரமணி தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய தொழிற்சான்றிதழ் படிப்புக்கான ஓராண்டு கால தொழிற்பிரிவுகளான கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டெண்ட், உணவு பதப்படுத்துதல், ஆடை தயாரித்தல் ஆகிய பிரிவுகளுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சியும், தையற்கலை தொழில்நுட்பப் பிரிவுக்கு மட்டும் 8-ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
 தொழில்நுட்பப் பிரிவுகளில் சேர்ந்து தேர்ச்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. வேலைதேடும் இளைஞர்கள், பெண்கள், தனியாக தொழில் தொடங்க காத்திருப்பவர்களும் இந்தப் பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம். இதில் ஆண்களுக்கு 14 முதல் 40 வயது நிறைந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது. தகுதியானவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற்றுத் தரப்படும். மேலும், அரசுப் பேருந்தில் 50 சதவீத கட்டணச் சலுகை பெற்றுத் தரப்படும். எனவே, விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT