கிருஷ்ணகிரி

ஒசூர் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

ஒசூர் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்ற 11-ஆவது பட்டமளிப்பு விழாவில்

DIN

ஒசூர் பெருமாள் மணிமேகலை பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்ற 11-ஆவது பட்டமளிப்பு விழாவில் 525 மாணவர்களுக்கு தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும், அண்ணா பல்கலை. முன்னாள் துணை வேந்தருமான பத்ம ஸ்ரீ ஆர்.எம்.வாசகம் சான்றிதழை வழங்கினார்.
விழாவில் அவர் மேலும் பேசியது:
தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஏற்ப அறிவுத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
உலக அளவில் 58 நாடுகளில் டி.சி.எஸ். நிறுவனத்தைச் சேர்ந்த இந்தியப் பொறியாளர்களே வேலை செய்து வருகின்றனர். உலக அளவில் 60 மில்லியன் பொறியாளர்கள் ஆண்டுதோறும் உருவாகி வருகின்றனர். அதில் 40 சதவீத பொறியாளர்களை இந்தியாவும், சீனாவும் உருவாக்கி வருகிறது. மாணவர்கள் தொழில் முனைவோராக மாறி பலருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் நிலையில் மேம்பட வேண்டும் என்றார்.
விழாவில் பி.எம்.சி டெக் கல்வி நிறுவனத்தின் தலைவர் பி.பெருமாள், செயலாளர் பி.குமார், கல்லூரி அறங்காவலர் பி.மலர், கல்லூரி முதல்வர் எஸ். சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இக்கல்லூரியில் பயின்ற 525 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தனர். அதில் 9 மாணவர்கள் பல்கலைகழக அளவில் தர வரிசை பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, 26 மாவட்டங்களில் இன்று மழை! நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை?

பிலிப்பின்ஸை புரட்டிப்போட்ட கேல்மெகி புயல்: 66 பேர் பலி!

மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவிற்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல: பிரகாஷ் ராஜ்

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

SCROLL FOR NEXT