கிருஷ்ணகிரி

விடுதி வசதி பெற எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தினமணி

ஆதிதிராவிடர், பழங்குடியின பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் அரசு விடுதியில் தங்கி படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
 பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவியர்களும் சேரத் தகுதியுடையவர்கள். விடுதிகளில் சேருவதற்கு, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதியுடைய மாணவ, மாணவியர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளர், காப்பாளிகளிடமோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாகப் பெற்று, நிறைவு செய்து வழங்கிடலாம்.
 பள்ளி மாணவ, மாணவியர் வரும் ஜூலை 12-ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி மாணவ, மாணவியர் ஜூலை 21-ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவியர் அரசின் இந்தச் சலுகையைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT