கிருஷ்ணகிரி

அனைத்து விவசாயக் கடன்களை ரத்து செய்ய  வலியுறுத்தல்

DIN

அனைத்து விவசாயக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம்,  கந்திகுப்பம் அருகே உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.   கூட்டத்துக்கு நிர்வாகி பவுன்ராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,  பொருளாளர் செல்வகுமார், மாநிலக் குழு உறுப்பினர்கள் கண்ணு, சுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருச்சியில் நடைபெற உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து 500}க்கும் மேற்பட்டோர் பங்கேற்பது,  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்துக் கிராமங்களுக்கும்  குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.  அனைத்து விவசாயக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்.  56 வயது நிறைவு செய்த விவசாயத் தொழிலாளர்களுக்கு நிபந்தனையின்றி  ரூ.3 ஆயிரம் உதவித் தொகை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT