மின் விபத்துகள் விழிப்புணர்வு பிரசாரம்
போச்சம்பள்ளி கோட்டம் அரசம்பட்டியில் பொதுமக்களிடையே மின் இணைப்பு மற்றும் மின் பாதைகளில் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு ஆட்டோவில் ஒலிபெருக்கிகள் மூலமாக விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
போச்சம்பள்ளி கோட்டம் அரசம்பட்டியில் பொதுமக்களிடையே மின் இணைப்பு மற்றும் மின் பாதைகளில் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு ஆட்டோவில் ஒலிபெருக்கிகள் மூலமாக விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
இந்தப் பிரசாரத்தில் மேற்பார்வை பொறியாளர் நந்தகோபால் தலைமை வகித்தார், செயற்பொறியாளர் வேல் போச்சம்பள்ளி முன்னிலை வகித்தார். அரசம்பட்டி உதவி மின் பொறியாளர் சாந்தகுமார் வரவேற்றார். போச்சம்பள்ளி மின் உதவி பொறியாளர் அருள், போச்சம்பள்ளி கோட்ட உதவி மின் பொறியாளர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
அரசம்பட்டி மின் உதவி பொறியாளர் அலுவலகத்தில் துவங்கிய பிரசாரம் பேருந்து நிலையம், புலியூர், கோட்டப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்றது.
மின் வாரியம் சார்பில் ஆட்டோவில் ஒலிபெருக்கிகள் மூலமாக மின்விபத்தைத் தடுக்கும் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.