கிருஷ்ணகிரி

ஒசூரில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு

DIN

ஒசூர் பேருந்து நிலையக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு
செய்தனர்.
ஒசூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு  கடையில்,  கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த இனிப்புகளை எலி சாப்பிடுவது போன்ற விடியோ காட்சி கட்செவி அஞ்சலில்  பரவியது. இதைப் பார்த்த நகராட்சி நிர்வாகம், சம்பந்தப்பட்ட கடைக்கு ரூ.2,000  அபராதம் விதித்தது. உணவுப்  பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடையை மூடி சீல் வைத்தனர். இந்நிலையில் கடைகளில், உணவுப்  பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தரமில்லாதஇனிப்புகள், 300 சிப்ஸ் பாக்கெட்டுகள், முன்தேதியிட்டு விற்பனைக்கு வந்த தண்ணீர் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT