கிருஷ்ணகிரி

தென்பெண்ணை ஆற்று நீரை சேமிக்க நடவடிக்கை தேவை: ஜி.கே. மணி

தினமணி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றில் வீணாகச் செல்லும் நீரை சேமிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
 கிருஷ்ணகிரியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள லாரி உரிமையாளர்களை அழைத்து அரசு பேச வேண்டும். லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் பொருளாதாரச் சிக்கல் ஏற்படும்.
 கிருஷ்ணகிரி வழியாக ரயில் போக்குவரத்தை தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒசூரில் விமானச் சேவையைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீரை சேமிக்க கால்வாய் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மேலும், தென்பெண்ணை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT