முகப்பு
கிருஷ்ணகிரி

விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி, கிருஷ்ணகிரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:52 PM
பகிர்:

டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி, கிருஷ்ணகிரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் கனியமுதன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர்கள் முனிராவ், மாயவன், துணைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் உள்ளிடோர் பங்கேற்றனர்.
டெங்கு காய்ச்சால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு உதவி வழங்காததையும், டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தாத மாநில அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழக்கங்களை எழுப்பினர்.
தருமபுரியில்..
தொலைத் தொடர்பு அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலர் த. ஜெயந்தி தலைமை வகித்து பேசினார். மாவட்ட துணைச் செயலர் மின்னல் சக்தி, நகரச் செயலர் ராமதுரை, செய்தித் தொடர்பாளர் த.கு.பாண்டியன், மக்களவைத் தொகுதி துணைச் செயலர் ராமன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

முழு கட்டுரையைப் படிக்க →