முகப்பு
தமிழ்நாடு

தேர்தல் நெருங்கும்போது ஒரு ஃபைனல் டிவிஸ்ட் இருக்கும்! - அண்ணாமலை

பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேட்டி...

Updated On : 14 மார்ச், 2026 at 4:40 PM
அண்ணாமலை - x / annamalai
பகிர்:

தமிழக அரசியலில் தேர்தல் நெருங்கும்போது ஒரு டிவிஸ்ட் இருக்கும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய அண்ணாமலை,

"தமிழக அரசியலில் எப்போதும் தேர்தல் நெருங்கும்போது ஒரு ஃபைனல் டிவிஸ்ட் இருக்கும். அதாவது தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாக ஒரு டிவிஸ்ட் இருக்கும். அது என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

ஓரிரு நாள்களில் தேர்தல் அறிவிப்பு வந்துவிடும். தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொருத்தவரை கூட்டணி பலமாக இருக்கிறது, ஆரோக்கியமாக இருக்கிறது. பிரதமர் 3 முறை இங்கு வந்துவிட்டார். மேலும் 2, 3 முறை வரவிருக்கிறார். நாங்கள் ஒரே நிலைப்பாட்டில்தான் இருக்கிறோம். திமுக கூட்டணியில்தான் இன்று பல்வேறு பிரச்னைகள் உள்ளன.

தவெக கூட்டத்தில் என்ன பேசினார்கள் என்று அந்த கட்சியின் நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களிடம்தான் கேட்க முடியும். விஜய் பற்றி நான் இதுவரையில் கூறியதில் எந்த மாற்றமும் இல்லை. நான் என் கருத்தை மாற்றவில்லை. அதேபோல விஜய் கட்சிக்கு எவ்வளவு தொகுதிகள் என்று கேட்கிறீர்கள், நான் கொடுக்கக்கூடிய இடத்திலும் இல்லை, வாங்கக்கூடிய இடத்திலும் இல்லை" என்றார்.

summary

There will be a final twist when election declared: Annamalai press meet

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.