FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி?

தமிழ்நாடு பாஜக வேட்பாளர்கள் பற்றி...

Updated On : 25 மார்ச் 2026, 10:53 am IST
அண்ணாமலை - Photo: Facebook
பகிர்:

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மீண்டும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும், புதுவரவான தவெகவும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

திமுகவும், அதிமுகவும் தொகுதிப் பங்கீட்டை கிட்டத்தட்ட நிறைவு செய்திருக்கும் நிலையில், இன்று காலை முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 27 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சித் தலைமை இன்று வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி, முன்னாள் தலைவர் அண்ணாமலை சிங்காநல்லூர், வானதி சீனிவாசன் கோவை வடக்கு உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தமிழிசை செளந்தரராஜன், விஜயதாரணி உள்ளிட்டோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

Will Annamalai contest in Coimbatore again?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments