கிருஷ்ணகிரி

'சிறுபான்மையினருக்கு விரைந்து கல்விக் கடன் வழங்க வேண்டும்

DIN

சிறுபான்மையினருக்கு விரைந்து கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சி வலியுறுத்தியது.
இதுகுறித்து அக் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் பாபு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாளாதார மேம்பாட்டுக் கழகம்(டாம்கோ) மூலம் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கும் வகையில் சிறப்பு முகாம்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்த முகாமில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது இதுவரை கல்விக் கடன் வழங்கப்படவில்லை.
இத்தகைய நிலையில், 12 முதல் 14-ஆம் தேதி வரையில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டன. கல்விக்கடன் வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறுபான்மையினருக்கு கல்விக் கடன் வழங்க கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளரின் செயல் கண்டனத்துக்குரியது. இது சிறுபான்மையினருக்கு எதிரான செயல் ஆகும்.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு உடனே கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடன் வழங்க மறுக்கும் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்

SCROLL FOR NEXT