முகப்பு
கிருஷ்ணகிரி

சந்திரசூடேஸ்வரர் கோயிலுக்கு 3 சிறிய தேர்கள் காணிக்கை

ஒசூரில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான  மரகதாம்பாள் சமேத சந்திரசூடேஸ்வரர் கோயிலுக்கு 3 சிறிய தேர்களை  பக்தர் காணிக்கையாக வழங்கினார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

ஒசூரில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான  மரகதாம்பாள் சமேத சந்திரசூடேஸ்வரர் கோயிலுக்கு 3 சிறிய தேர்களை  பக்தர் காணிக்கையாக வழங்கினார். 
ஆண்டுதோறும் மாசி மகத்தை முன்னிட்டு,  தேர்பேட்டையில் மலை அடிவாரத்தில் உள்ள கல்யாண சூடேஸ்வரர் கோயிலில் நடைபெறும் தேர்த்த் திருவிழாவில், விநாயகர்,  மரகதாம்பாள், சந்திரசூடேஸ்வரர் ஆகிய உற்சவர்கள் 3 தேர்களில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.   இந்த 3 தேர்களைப் போலவே  சிறிய அளவில் 
1 அடி, 3 அடி, 4 அடி ஆகிய உயரங்களில் குழந்தைகள் இழுக்கும் வகையில் 3 தேர்களை ஒசூர் இந்திரா நகரைச் சேர்ந்த சந்திரபாபு ரெட்டி(50), தயாரித்துள்ளார். பின்னர்,  இந்தத் தேர்களை சந்திரபாபு ரெட்டி தனது மனைவி சுஜாதா,  மகன்கள் பரத்குமார்,  புனித்குமார் ஆகியோருடன் சேர்ந்து கோயிலுக்கு காணிக்கையாக ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ கே.ஏ.மனோகரன்,  ஐஎன்டியூசி மாவட்டத் தலைவர் முனிராஜ்,  கோயில் அர்ச்சகர் வாகீஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →