முகப்பு
தூத்துக்குடி

தாய், மகளுக்கு அரிவாள் வெட்டு: ஆட்டோ ஓட்டுநா் கைது

Updated On : 15 மார்ச், 2026 at 8:49 PM
கைது
பகிர்:

சாத்தான்குளம் அருகே தாய், மகளை அரிவாளால் வெட்டியதாக ஆட்டோ ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளாா்.

சாத்தான்குளம் அருகே உள்ள பூச்சிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் ஞானமலா். இவரது மகளான மரிய ஜெபராணி கடந்த 2 நாள்கள் முன்பு அதே பகுதியில் ஏற்பட்ட பிரச்னையில் ஒருவரை திட்டியதாக கூறப்படுகிறது. இதனை பூச்சிக்காடு விலக்கு பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் லிங்கதுரை ( 65) கண்டித்தாராம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பேருந்து ஏற பூச்சிக்காடு விலக்கு பகுதிக்கு வந்த ஞானமலா், மரிய ஜெபராணி ஆகியோருக்கும், லிங்கதுரைக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில், லிங்கதுரை அரிவாளால் இருவரையும் வெட்டியதாக கூறப்படுகிறது.

பலத்த காயமடைந்த இருவரும் திசையன்விளை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பின், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனா். இது குறித்த புகாரின் பேரில் தட்டாா் மடம் காவல் ஆய்வாளா் (பொறுப்பு ) இசக்கிதுரை வழக்குப் பதிந்து லிங்கதுரையை கைது செய்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →