முகப்பு
கிருஷ்ணகிரி

மதுபானக் கடைகளுக்கு நாளை விடுமுறை

மே தினத்தையொட்டி,   செவ்வாய்க்கிழமை (மே 1) மதுபானக் கடைகள் மூடப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

மே தினத்தையொட்டி,   செவ்வாய்க்கிழமை (மே 1) மதுபானக் கடைகள் மூடப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை விதியின்படி, மே தினத்தையொட்டி மதுபானம் விற்பனை இல்லா தினமாக கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.  இதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுகூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு,  தனியார் உணவகங்கள் உள்பட  அனைத்தும் செவ்வாய்க்கிழமை மூடப்படும்.
இந்த உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளைத் திறந்தாலும், விற்பனை செய்தாலும் அவர்கள் மீது சட்ட  நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →